விஷாலின் வேண்டுகோள் ; அதர்வாவின் பெருந்தன்மை

253

sema botha aagathe release postponed

அதர்வா நடிப்பில், பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செம போத ஆகாத’. இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக மிஸ்தி மற்றும் அனைக்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை கிக்காஸ் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் அதர்வா தயாரித்துள்ளார்.

ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. முதலில் இந்தப் படம் மே-18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக தயாரான படங்களுக்கு வழிவிடும் வகையில், படத்தின் ரிலீஸ் தேதி வருகிற மே 25-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பின்னர் படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இப்போது மீண்டும் எழுந்துள்ள சிக்கலால் இந்தப்படத்தின் ரிலீஸ் வரும் ஜூன்-14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. காரணம் கடந்த 1௦ஆம் தேதியே ரிலீசாக வேண்டிய பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம், சில பிரச்னைனிகள் காரணமாக இந்தவாரம் மே-18ஆம் தேதி ரிலீஸானது.. அதனால் இந்த வாரமும் அடுத்த வாரமும் திட்டமிடப்பட்டிருந்த சின்னப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது..

இந்தநிலையில் அதர்வாவின் படம் வரும் 25ஆம் தேதி வெளியானால் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டு வைத்துள்ள ரிலீஸ் திட்டத்தில் மாறுதல் ஏற்பட்டு சின்னப்படங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அதர்வாவிடமும் படத்தி வெளியிடும் நிறுவனத்திடமும் ‘செம போத ஆகாத’ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்கும்படி வேண்டுகோள் வைத்தார். அதை அதர்வாவும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு வரும் ஜூன்-14ஆம் தேதிக்கு தனது பட ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளார்.

Comments are closed.