சீனுராமசாமியை இருமுறை திகைக்க வைத்த ஸ்டாலின்..!

211

m-k-stalin-in-seenu-ramasamy-sister-marriage

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றதுடன் அதில் மருத்துவம் பற்றி சொல்லப்பட்ட கருத்துக்காக, சில அரசியல் தலைவர்களின் பாராட்டையும் சேர்த்து பெற்றது.. அதில் சீனுராமசாமியே எதிர்பாராத ஒன்றுதான் தளபதி மு.க.ஸ்டாலினிடம் இருந்து கிடைத்த பாராட்டும் படத்தை பற்றிய அவரது நீண்ட விமர்சனமும்..

இதனால் சந்தோஷத்தில் திகைத்துப்போன சீனுராமசாமி, மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், தனது தங்கையின் திருமணத்திற்கு வரவேண்டும் என அழைப்பிதழும் தந்துவிட்டு வந்தார்.. நேற்று அவரது தங்கை அனிதாவுக்கும் பாலாஜி என்பவருக்குமான திருமண வரவேற்பு மாலை அரும்பாக்கம் லீ கிளப்பில் நடைபெற்றது.

இதில் திரையுலக பிரபலங்கள் திரளாக வந்து வாழ்த்தினார்கள்.. அதேசமயம் சர்ப்ரைஸ் விசிட்டாக மு.க.ஸ்டாலினும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார். உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed.