திரைக்கதை மன்னனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

213

 

இந்திய சினிமாவின் தலை சிறந்த திரைக்கதை ஆசிரியர் யாரென கேட்டால் ஒட்டுமொத்த திரையுலகமும் இயக்குனர் கைகாட்டுவது இயக்குனர் கே.பாக்யராஜை நோக்கித்தான். திரைக்கதை எழுதுவதில் பாக்யராஜுக்கு நிகர் யாருமில்லை என்றே சொல்லவேண்டும். பாராதிராஜாவால் உருவாக்கப்பட்ட இந்த இந்த ‘புதிய வார்ப்பு’ தமிழ்சினிமாவில் சுவர் இல்லாமலேயே சித்திரங்ககளை எழுத தொடங்கியது நம் தமிழ்சினிமா செய்த பாக்கியம் தான்.

தமிழ் சினிமா வரலாற்றில் தொடர்ந்து 11 வெற்றிப் படங்களைத் தந்த ஒரே இயக்குநர், ஹீரோ என்ற பெருமையும் பாக்யராஜுக்கே உண்டு. கதை, திரைக்கதை, இயக்கம் என இவரது பங்களிப்புள்ள படங்கள் தெலுங்கு, கன்னடம், இந்தியில் கிட்டத்தட்ட 27 முறை ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றன. இந்தி சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சனையே இயக்கிய சாதனையாளர்.

தன்னம்பிக்கையும், திறமையும் இருந்தால் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்ல, நடிகராகவும் ஜெயிக்கலாம் என்று தனக்குப்பின் வந்தவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக வழி காட்டியவர் இவர்தான் என்று சொன்னாலும் அது மிகையாகாது. இன்று பிறந்த நாள் காணும் தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த இயக்குனர், நடிகர் கே.பாக்யராஜுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

Comments are closed.