சத்யராஜ் படத்துக்கு பொருத்தமான பெயர் வைத்தார் ஆண்டனி..!

240

oru nal iravil 1
கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படம் ‘ஷட்டர்’. எடிட்டர் ஆண்டனி இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழில் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். சத்யராஜ், யூகிசேது, அனுமோல் நடித்துள்ள இந்தப்படம் வரும் நவ-2௦ல் வெளியாக இருக்கிறது.

ஏ.எ.விஜய் மற்றும் ஷாம் பால் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தில் கல்வி நிறுவனங்கள் நடத்திவரும் ஐசரி கணேஷின் மகன் வருண் இதில் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு முதலில் நைட் ஷோ என பெயர் வைக்கப்பட்டிருந்தது..

Related Posts

ஆனால் படத்தின் கதை பற்றி தெரிந்தவர்கள், ஆங்கிலத்தில் பெயர் இருப்பதால் வரிவிலக்கு பிரச்சனை உள்ளது என்பதை விட, கதைக்கு இன்னும் பொருத்தமான பெயராக வைத்தால் நன்றாக இருக்கும் என ஆண்டனியிடம் ஆலோசனை சொன்னார்களாம்.

இதனால் இப்போது அழகு தமிழில் ‘ஒரு நாள் இரவில்’ என படத்திற்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது. படத்தின் கதை ஒருநாள் இரவில் நடக்கிறது என்பதால் இது பொருத்தமான தலைப்பாகவே இருக்கிறது என பலரும் பாராட்டியுள்ளார்கள். படத்தை பார்த்த தணிகை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Comments are closed.