சசிகுமார் கதாநாயகனாக நடிக்க வேல்ராஜ் இயக்கும் புதிய படம்!

198

ஜே.எஸ்.பி.சதிஷ்குமார் ஜே.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம், ’மெர்லின்’, ’அசுரகுரு’, ‘சிங்கப்பெண்ணே’, ‘GST’உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படத்தை தனுஷ் கதாநாயகனாக நடித்த ’வி.ஐ.பி’ மற்றும் ‘தங்கமகன்’ படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தலைப்பு உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

Comments are closed.