தஞ்சாவூர் ஏரியாவை விட்டு வரமறுக்கும் சசிகுமார்..!

181

சசிகுமார் நடித்த படங்களில் ‘பிரம்மன்’ படம் தவிர மற்ற படங்கள் அனைத்தும் கிராமத்து பின்னணியை கொண்டவை தான்.. அவைதான் அவருக்கு வெற்றியையும் வாங்கித்தந்தன. தற்போது பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்துவரும் ‘தாரை தப்பட்டை’ படமும் கிராமத்து பின்னணியில் தான் உருவாக்கி வருகிறது. இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறது.

பாலாவின் படத்தை தொடர்ந்து, ‘ஜில்லா’ புகழ் ஆர்.டி.நேசனின் உதவியாளரான வசந்தமணி என்பவர் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் கிராமத்து பின்னணியில் தான் நடிக்க இருக்கிறார் சசிகுமார். அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படமும் தஞ்சாவூர் பின்னணியிலேயே உருவாக இருக்கிறதாம். சசிகுமாரின் தம்பியாக ஜெய் நடிக்கலாம் என சொல்லப்பட்டாலும், அந்த கேரக்டருக்கு புதியமுகம் ஒன்றைத்தான் தேடிவருகிறார்களாம்.

Comments are closed.