சசிகுமார் படத்தில் ஜோடிசேர்ந்த கோவை சரளா-சங்கிலி முருகன்..!

252

sasikumar-new-film-1

‘கிடாரி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் பிரகாஷ் இந்தப்படத்தை இயக்குகிறார்.. ‘கிடாரி’ படத்துக்கு இசையமைத்த தர்புகா சிவாவே இந்தப்படத்திற்கும் இசையமைக்கிறார். வரும் செப்-21ஆம் தேதி இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

இந்தப்படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் தெரியாவிட்டாலும் கதையின் நாயகியாக நடிக்க இருப்பது கோவை சரளா தானாம். ‘கொம்பன்’ படத்திற்கு பிறகு கோவை சரளாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சங்கிலி முருகன் நடிக்கிறார்.

Comments are closed.