கைமாறியது சற்குணத்தின் ‘சண்டிவீரன்’..!

233

 

இயக்குனர் பாலா இரண்டு படங்களை தயாரிக்க ஆரம்பித்ததில் மிஸ்கினின் ‘பிசாசு’ வெளியாகிவிட்டது.. அடுத்து வெளியாக வேண்டியது சற்குணம் இயக்கிவரும் ‘சண்டிவீரன்’ படம் தான்.. அதர்வா, ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் இந்தப்படத்தை ஏக் தம்மில் ஒரேகட்ட படப்பிடிப்பாக நடத்தி முடித்துவிட்டார் சற்குணம்.. தற்போது இந்தப்படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் வெளியிடும் உரிமையை ஸ்ரீகிரீன் புரடக்சன் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் சலீம் திரைப்படத்தையும், சிட்டி ஏரியாவில் வேலையில்லா பட்டதாரி மற்றும் கயல் படத்தையும், செங்கல்பட்டு ஏரியாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பீட்சா-2, வெள்ளக்காரதுரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைப்பெறவுள்ளது.

Comments are closed.