இன்றைய தேதியில் சந்தானத்தை தவிர, பிஸியான நடிகர் என்று வேறு யாரையும் நம்மால் சொல்லமுடியாது. இன்றைய முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நண்பன் என்றால் அதுவும் சந்தானம் தான். இந்த டைட்டான நேரத்திலும் தனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவர் ஹீரோவாக நடித்துவரும் படம் தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’.
இந்தப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டுக்களை விட சந்தானத்தின் சினிமா நண்பர்களின் பாராட்டு மழையில் தான் சந்தானம் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டார்.
கதாநாயகனாக நடிப்பதற்கென்றே தீவிர எடைக்குறைப்பில் ஈடுபட்டு இருபது வயது இளைஞன் போல பொலிவுடன் இருக்கும் சந்தானம், இந்தப்படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனிடம் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார்.
இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிப்பவர் ஆஷ்னா சாவேரி. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக ஜனரஞ்சகமான இருக்கும். காரணம் நகைச்சுவையில் கோலோச்சும் சந்தானம் இந்தப்படத்தில் குணசித்திரம், நடனம் , சண்டை, காதல் என எல்லா ஏரியாவிலும் புகுந்து இளையாடியிருக்கிறார்” என்கிறார் இந்தப்படத்தை இயக்கியுள்ள நகைச்சுவை நடிகர் ஸ்ரீநாத்.
இவர், மறைந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ஜீவாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு முத்திரை என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தவிர சந்தானத்துடன் சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் நண்பனாகவும் நடித்துள்ளார். இந்தப்படத்தை பி.வி.பி.சினிமாவும் மற்றும் ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.
Comments are closed.