போலீஸ் கேரக்டர்களில் இனி சமுத்திரக்கனி நடிப்பது சந்தேகம் தான்..!

232

samuthirakani as police

தமிழ் சினிமாவில் விஜயகாந்த்திற்கு அடுத்ததாக போலீஸ் யூனிபார்மை அதிகம் மாட்டியவர் சமுத்திரக்கநியாகத்தான் இருப்பார்.. கடைசியாக விசாரணை படத்தில் மாறுபட்ட போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களை அதிரவைத்த சமுத்திரக்கனி, இனி போலீஸ் வேடத்தில் நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறாராம்.

இதுபற்றி சொலும் சமுத்திரக்கனி, “தற்போது போலீஸ் வேடத்தில் நடிக்க சொல்லி நிறைய படங்கள் வருகிறது. ஆனால், எதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் இனி போலீஸ் வேடத்தில் நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். ‘விசாரணை’ படத்தில் நடித்த போலீஸ் வேடத்திற்கு மேலான ஒரு போலீஸ் வேடமா!, அது ஒன்றே போதும். இப்போதும் அந்த வேடத்தை நினைத்து பார்த்தால் எனக்கு உடம்பே நடுங்கிவிடும். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, என் காலில் ஏதோ பாம்பு சுற்றிக்கொண்டது போன்ற ஒரு உணர்வு இருக்கும், அந்த அளவுக்கு என்னை உலுக்கிவிட்ட கதாபாத்திரம் அது. இப்போதும் விசாரணை படத்தின் போலீஸ் வேடத்தை நினைத்தால், எனக்கு துக்கம் வராது” என்கிறார் சமுத்திரக்கனி..

Comments are closed.