விக்ரம் படத்தில் இரு வேடங்களில் சமந்தா..!

210


தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைப்பதுதான் அரிது. கடந்த பத்து வருடங்களில் இரட்டை வேட கதாபாத்திரங்களில் நடித்த கதாநாயகிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தமிழில் ஜோதிகா ‘பேரழகன்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதில் கண்பார்வை தெரியாத வேடம் ஏற்றிருந்தார் ஜோதிகா. சேரன் இயக்கிய ‘பாண்டவர் பூமி’ படத்தில் கதாநாயகி ஷமீதா இரு வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து சமீபத்தில் பிரியாமணியும் ‘சாருலதா’ என்ற படத்தில் முதன் முறையாக ஒட்டி பிறந்த இரட்டையராக முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்தார்.

இப்போது சமந்தாவுக்கும் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜாக்பாட் அடித்திருக்கிறது. சமந்தாவிடம் மில்டன் கதை சொன்னபோது தனக்கு இரு வேடங்கள் என்றதும் ரொம்பவே சந்தோஷமாகி விட்டாராம் சமந்தா.

Comments are closed.