
கார்த்தியின் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றம் கொடுத்த படம் தான் ‘சகுனி’.. ஆனால் இன்று டிவி ஒளிபரப்பில் மட்டும் ஹைலைட்டான இடத்தை இந்தப்படம் தக்கவைத்திருப்பது ஆச்சர்யம். இந்தப்படத்தை இயக்கிய சங்கர் தயாள் கடந்த இரண்டு வருடமாக அடுத்த படத்துக்கான முயற்சியில் இருந்தார். இப்போது விஷ்ணுவை வைத்து ‘வீரதீர சூரன்’ என்கிற படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப்படத்திற்கு இயக்குனர் சுசீந்திரன் தான் கதை எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, படத்தின் கதாநாயகனாக, விஷ்ணு பொருத்தமாக இருப்பார் என ஆலோசனை சொன்னதும் அவர்தான். ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த கேத்தரின் தெரசா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.
Comments are closed.