இங்கிலாந்து நாட்டின் எட்க்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை காண கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சினும் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காணவந்த தனுஷூக்கு, மழையால் ஆட்டம் தடைபட்ட நேரத்தில் சச்சினை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது..
அதை அவர் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனுஷ் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது…

Comments are closed.