
எஸ்.ஜே.சூர்யாவை கதாநாயகனாக வைத்து செல்வராகவன் இயக்கிவரும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.. இந்தப்படத்தின் பைனல் கட்டை பார்த்த செல்வராகவனால் அவரது மனதில் உண்டான உத்வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை..
உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ராக்ஸ்டார் என்கிற பட்டத்தை வழங்குகிறேன்” என தனது மகிழ்ச்சியை அதிரடியாக வெளிப்படுத்தியுள்ளார்.. பொதுவாக இப்படி தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ளாத செல்வராகவனே தன்னை இவ்வாறு புகழ்ந்துள்ளது தனக்கு கிடைத்த ஸ்பெஷல் விருது என்று குறிப்பிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
Comments are closed.