ஆர்.சுந்தர்ராஜனின் மகன் இயக்குனராக அறிமுகமாகும் ‘கெட்ட பையன் சார் இவன்’..!

210

ketta paiyaan sir ivan

சூப்பர்ஸ்டார் ரஜினி பேசிய ஹிட் வசனங்கள் படத்தின் டைட்டிலாக மாறும் வரிசையில், இயக்குனரின் வாரிசு ஒரு இயக்குனர் ஆக அறிமுகமாகும் வரிசையில், இசை ஜாம்பவான் வீட்டு வாரிசு ஒருவர் இசையமைப்பாளர் ஆக அறிமுகமாகும் வரிசையில் என மூன்று சிறப்பம்சங்களை உள்ளடக்கி உருவாகி வரும் படம் தான் ‘கெட்ட பையன் சார் இவன்’.

‘காளி’ படத்தில் ரஜினி பேசிய சூபர்ஹிட் வசனம் தான் இந்தப்படத்தின் டைட்டில். ‘சதுரங்க வேட்டை’ நட்டிதான் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் யார் தெரியுமா..? வெள்ளிவிழா கண்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தான் இந்தத்தீபக்.

அதற்காக அப்பா இயக்குநர் என்பதால் எல்லாம் தனக்குத்தெரியும் என தீபக் அப்படியே திரைப்படம் இயக்க வந்து விடவில்லை. முறையாக இயக்குநர் ஏ. எல்..விஜய்யிடம் ‘தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா பற்றிய பாடங்கள் படித்து விட்டுத்தான் இப்போது இயக்குநராகியுள்ளார்.

இதே படத்தில் ஏ.எச்..காஷிஃப் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரும் ஒரு வாரிசுக் கலைஞர்தான். இசைப்புயல் ஏ.ஆர் .ரஹ்மானின் தங்கை மகன்தான் இந்த காஷிஃப்.. கடந்த காதலர் தினத்தன்று வெளியான ”போ போ என்“ என்கிற ஒற்றைப் பாடல் மூலம் எட்டுத் திக்குகளையும் எட்டிப் பார்க்க வைத்தவர்தான் இந்த காஷிஃப்.

இந்தப்படத்தின் டைட்டிலை தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு இன்று முறைப்படி அறிமுகப்படுத்தினார்.

Comments are closed.