பொதுவாக ஒரு படத்தை மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்வதென்றால் அதன் ஒரிஜினல் இயக்குனரே தமிழிலும் இயக்குவதுதான் சிறப்பாக இருக்கும் என்பதை தனது அனுபவத்தில் நன்கு உணர்ந்தவர் சூர்யா.. ஏற்கனவே தான் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ மற்றும் ‘பேரழகன்’ படங்களின் ரீமேக் வெற்றி கற்றுக்கொடுத்த பாடத்தை இப்போது வரை சூர்யா மறக்கவில்லை.
தற்போது தான் தயாரித்து, தனது மனைவி ஜோதிகா நடித்துள்ள மலையாள ரீமேக்கான ’36 வயதினிலே’ படத்தையும் அதன் ஒரிஜினலை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசையே இயக்க சொன்னதும் கூட அந்த அனுபவத்தில் தான். அதனால்தான் தன்னைவிட சூர்யாவிடம் இருந்தால் தான் அது சரியான இடத்திற்கு போகும் என்பதால் தனது ஒரிஜினலான ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்தின் மொத்த இந்திய ரீமேக் ரைட்சையும் சூர்யாவிடமே ஒப்படைத்துவிட்டார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.
மற்ற மொழிகளில் இந்தப்படத்தை ரீமேக் செய்ய பலபேர் போட்டி போடுகின்றனர். அப்படி ரீமேக் ரைட்ஸ் கேட்டு வரும் தயாரிப்பளார்களிடம் சூர்யா வைக்கும் ஒரே கண்டிஷன் அந்தப்படத்தையும் ரோஷன் ஆண்ட்ரூஸ் தான் இயக்குவார் என்பதுதான். அந்த அளவுக்கு சூர்யாவின் மனதில் இடம்பிடித்துவிட்டார் ரோஷன் ஆண்ட்ரூஸ்..
Comments are closed.