இந்தியன் பனோரமாவில் ஜே.எஸ்.கே.பிலிம்ஸுக்கு தொடர் அங்கீகாரம்..!

186

 

தரமான படங்களை தயாரித்து வெளியிடும் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனம் நல்ல படங்களை வெளியிடுவதன் மூலம் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு இந்திய அரங்கில் மட்டுமல்லாது உலா அரங்கில்  தமிழ்சினிமாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து வருகிறது.

அந்தவகையில் இந்த வருடம் இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் கலந்துகொண்ட 181 படங்களில் தேர்வு செய்யப்பட 26 படங்களில் ஜே.எஸ்.கே நிறுவனத்தின் ‘குற்றம் கடிதல்’ மட்டுமே தமிழ்ப்படம்.. இந்தப்படத்தை இயக்கியுள்ளவர் அறிமுக இயக்குனரான பிரம்மா.

ஐந்து பல்வேறு வழக்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்கை, அந்த ஒரு நாளில்ஏற்படும் சம்பவம், அதன் அடிப்படையில்  வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை  சித்தரிக்கும்கதைதான் இந்த  ‘குற்றம் கடிதல்’.  இதேபோல கடந்தவருடம் இந்தியன் பனோரமாவில் ஜே.எஸ்.கே பிலிம்ஸின் ‘தங்கமீன்கள்’ படம் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.