விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். படம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசும்போது, என் நலனில் மிகுந்த அக்கறை உடையவர் விஜய் சேதுபதி. அவரும் இயக்குனரும் என் மேல் முழு நம்பிக்கையை வைத்து, முழு சுதந்திரம் கொடுத்தனர். அது தான் இந்த படத்தில் இசையாய் வெளிப்பட்டிருக்கிறது என்றார்.
நடிகர் சுமார் மூஞ்ச குமார் டேனியல் பேசும்போது, “இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. படத்தில் நான் பேசிய ஒரு வசனம் நிச்சயம் ட்ரெண்ட் ஆகும்னு நம்புறேன் என்றார்
இயக்குனர் ஆறுமுகத்துக்கு நல்ல காமெடி சென்ஸ்பல் இருக்கிறது. நல்ல காமெடி நடிகராக வரவும் வாய்ப்பு இருக்கிறது. சூது கவ்வும் படத்தில் பார்த்த விஜய் சேதுபதிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கும் நடிப்பில் நிறைய மாற்றம். காயத்ரி மாதிரி ஒரு நடிகையை ஏன் தமிழ் சினிமா இன்னும் கொண்டாடவில்லை என தெரியவில்லை. இந்த படத்தில் கொண்டாடப்படுவார்” என்றார் நடிகர் ஆர்ஜே ரமேஷ் திலக்.
“இந்த படத்தில் கோதாவரினு ஒரு கதாபாத்திரம் இருக்கு, நடிக்கிறீங்களானு கேட்டாங்க. ஆறுமுக குமார் தயாரிப்பாளராக, இயக்குனராக இருந்தும் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் ரொம்பவே கூலாக இருந்தார். இந்த குழுவில் இருந்த எல்லோருடனும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் நல்ல ஒரு அனுபவமாக அமைந்தது. தலக்கோணம் காட்டில் மொத்த குழுவுடன் பழக நிறைய வாய்ப்பு கிடைத்தது” என்றார் நடிகை காயத்ரி.
இது என்னுடைய முதல் தமிழ் படம். தமிழ் தெரியாது, குழுவில் நடிகர்கள் யாரையும் தெரியாது, வசனம் கூட சரியாக தெரியாது. ஆனாலும் என்னை உற்சாகப்படுத்தி எனக்கு ரொம்பவே ஆதரவு கொடுத்தார்கள் என்றார் நடிகை நிஹாரிக்கா.
“இந்த படத்தில் எனது ஹரிஷ் கதாபாத்திரம் போல என்னுடைய ரியல் லைஃபிலும் நான் அப்படி தான். இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி என்னை பரிந்துரைத்தது எனக்கு பெருமை. சினிமாவிலும், வாழ்க்கையிலும் எனக்கு நண்பனாக பயணித்து வருபவன் டேனி தான். இயக்குனர் ஆறுமுக குமாருக்கு இது முதல் படம் தான் என்றாலும் தனக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு வாங்கி, சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்” என்றார் கௌதம் கார்த்திக்.
ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக் கூடியவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார்.. தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக். எந்த ஈகோவும் இல்லாத, நன்கு முதிர்ந்த அனுபவம் கொண்டவர். அவரை இந்த படத்தில் பரிந்துரைத்ததற்கு பெருமைப்படுகிறேன். காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த வருடம் அவருக்கு மிக சிறந்த வருடமாக இருக்கும் என்றார் விஜய் சேதுபதி.
“நான் இயல்பாக பழகுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் விஸ்வரூப வளர்ச்சி அடைந்திருக்கும் விஜய் சேதுபதி இப்போதும் அதே மாதிரி பழகுவது தான் ரொம்ப பெரிய விஷயம். தன் கதாபாத்திரத்தை எப்படி மெறுகேற்றி செய்வது என்ற எண்ணம் உடையவர். அது தான் அவரின் வெற்றிக்கும் முக்கிய காரணம். படத்தில் கௌதம் கார்த்திக்குக்கு ஜோடினு சொன்னா அது டேனியல் தான். ரொம்பவே ஜாலியான ஹீரோ. எல்லோரும் ரசிக்கும் ஒரு பொழுதுபோக்கு படமாக நிச்சயம் இருக்கும்” என்றார் இயக்குனர் ஆறுமுக குமார்.

Comments are closed.