நார்வே பிலிம் பெஸ்டிவலில் ‘ராமானுஜன்’ படத்துக்கு விருது..!

184

புகழ்பெற்ற மேதைகளான பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியான ஞானராஜசேகரன், கடந்த வருடம் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கையை ‘ராமானுஜன்’ என்கிற பெயரில் படமாக இயக்கி வெளியிட்டார்.. ராமானுஜமாக மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபினய் நடிக்க, அவருக்கு ஜோடியாக பாமா நடித்திருந்தார்.

இந்தப்படம் சமீபத்தில் ஒஸ்லோவில் நடைபெற்ற நார்வே பிலிம் பெஸ்டிவல்-2௦15ல் போட்டியில் கலந்துகொண்டு சர்வேதச ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. சிறந்த தயாரிப்பு, இசை, ஒளிப்பதிவு, குணச்சித்திர நடிகர் என நான்கு பிரிவுகளில் போட்டியிட்ட இந்தப்படம், அதில் சிறந்த தயாரிப்புக்கான விருதை பெற்றுள்ளது. இந்த விருதை படத்தின் தயாரிப்பாளரான சுஷாந்த் தேசாய் பெற்றுக்கொண்டார்.

Comments are closed.