ரஜினியின் கட்-அவுட் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்ட சௌந்தர்யா..!

260

sowndharya - rajini

தந்தையர் தின நிகழ்வாக தனது தந்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி அவரது இளைய மகளான சௌந்தர்யா சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.. அதில் ஆச்சர்யப்பட வைக்கும் ஒரு விஷயமும் இருந்தது.. அதாவது ரஜினி படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நேரங்களிலும் கூட தனது குழந்தைகளுடன் செலவிட நேரம் ஒதுக்க தவறியதில்லையாம்..

ஆனால் அவர்கள் நினைத்தபடி அவர்களை அழைத்துக்கொண்டு வெளியே சுற்றுவது மட்டும் ரஜினிக்கு சிரமமாக இருந்ததாம்.. ஆனாலும் ஒருநாள் சௌந்தர்யா மற்றும் அவரது தோழி இருவரையும் வெளியே அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் கிளம்பினாராம் ரஜினி..

மெரீனா பீச்சுக்கு சென்ற சௌந்தர்யா சாதாரண வீட்டு பெண் போல தனக்கு விரும்பியதை வாங்கி சாப்பிட்டு, தனது தோழியுடன் மகிழ்ச்சியாக சுற்றினாராம். அங்கே பிரபல நடிகர்களின் கட் அவுட்டுகளை வைத்திருப்பார்கள் அல்லவா.? அதனுடன் நின்று ரசிகர்கள் போட்டோ எடுத்துக்கொள்வதை பார்த்து தானும் அதுபோல எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டாராம் சௌந்தர்யா.

ரஜினியும் ஒகே சொல்லிவிட அவர் போய் நின்றது ரஜினியின் கட் அவுட் பக்கத்தில் தான்.. என்னதான் ரஜினியே தனது தந்தையாக இருந்தாலும் கூட, ஒரு ரசிகையாக அவரது கட் அவுட்டுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்வதும் கூட சௌந்தர்யாவின் ஆசையாக இருந்ததாம். ஒரிஜினல் ரஜினி அருகில் நிற்பதை அறியாத அந்த புகைப்படக்காரரும் கட் அவுட் ரஜினியுடன் சௌந்தர்யா நின்ற போட்டோவை எடுத்து கொடுத்தாராம். இது எப்டி இருக்கு..?

Comments are closed.