ரஜினியின் ‘காலா’வில் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பிக்கு வாய்ப்பு..!

222

dhileepan in kaala

பா.ரஞ்சித் டைரக்சனில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் பட்டியலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கதாநாயகியாக ஹூமா குரோஷி நடிக்கிறார். ரஞ்சித்தின் ஆஸ்தான நடிகர்களில், முந்தைய ‘கபாலி’யில் இடம்பெற்றவர்களில் ரமேஷ் திலக் மட்டுமே மீண்டும் இதில் வாய்ப்பு பெற்றுள்ளார்.

சமுத்திரக்கனி ரஜினியின் வலது கையாக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, நானா படேகர், சம்பத், அரவிந்த் ஆகாஷ் ஆகியோருக்கு இதில் வாய்ப்பு கிடைத்துள்ளது.. ஆச்சர்யமாக ‘வத்திக்குச்சி’ என்கிற படத்தில் நடித்து, அதன்பின் நீண்ட நாட்களாகவே என்ன ஆனார் என தெரியாமல் இருந்த திலீபன் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றபடி மும்பை சம்பந்தப்பட்ட கதைக்களம் என்பதால் பாலிவுட் நடிகர்கள் சம அளவில் இதில் இடம்பெற்றுள்ளனர். நேற்று மும்பையில் தொடங்கிய இந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறுகிறது.

Comments are closed.