ட்விட்டரில் பாதம் பதித்தார் ரஜினி..!

154

திரையுலகை பொறுத்தவரை இது ஒரு வரலாற்று நிகழ்வு.. ஊரெங்கும் இனி இதே பேச்சாகத்தான் இருக்கும்… வேறு வழியே இல்லை.. ட்விட்டர் இணையதளமே இன்னும் சில நாட்கள் ஸ்தம்பிக்கும். சூப்பர்ஸ்டாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் தூரம் இனி குறையும்..

ட்விட்டரில் அவர் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் ரசிகர்களுடன் அவர் நேரடியாக பேசுவது மாதிரித்தான். “கடவுளுக்கு சல்யூட்… அனைவருக்கும் வணக்கம்.. ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி.. இந்த டிஜிட்டல் பயணம் என்னை பரவசப்படுத்துகிறது” – இதுதான் அவரது முதல் ட்வீட்

இது குறித்து ரஜினியின் அறிக்கை வெளியானதில் இருந்து நிமிடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பின்தொடர, ஒரே நாளில், அதுவும் சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் பின் தொடர ஆரம்பித்துவிட்டார்கள். நாம் மேலே குறிப்பிட்டது போல ட்விட்டர் இணையதளமே இன்னும் சில நாட்கள் ஸ்தம்பிக்கும்.

Comments are closed.