‘வேலைநிறுத்தம்’ பிடிக்கவில்லை ; ‘பெப்சி’க்கு ரஜினி அட்வைஸ்..!

207

rajini 1

தமிழ் திரையுலகில் ‘பெப்சி’ தொழிலாளர்கள் நேற்றுமுதல் வேலைநிறுத்த போராட்டம் துவங்கியுள்ள நிலையில் இதில் ரஜினி, கமல் ஆகியோரின் நிலைப்பாடு என்ன, அவர்கள் யார் தரப்பை ஆதரிக்கிறார்கள் என்பதை அறிய திரையுலகமே ஆவலாக இருக்கிறது.

இதில் கமல் என்ன நினைக்கிறார் என்பதுபற்றி, கமலின் வீட்டிற்கே சென்று விவாதித்து ஆலோசனை கேட்டுள்ளார் ஆர்.கே.செல்வமணி… அதற்கு கமல், “இப்போது திரையுலகம் சிக்கலான சூழலில் இருக்கிறது செல்வமணி.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்க” என கூறினாராம் கமல்.

ஆனாலும் அதில் திருப்தியடையாத ஆர்.கே.செல்வமணி தரப்பினர், ரஜினியையும் இன்று சந்தித்து அவரது ஆதரவை கேட்டுள்ளனர்.. அவர்களிடம் சமாதனம் பேசி அனுப்பிய ரஜினி, அதன்பின்னால் தனது நிலைப்பாடு குறித்து உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்..

“எனக்கு பிடிக்காத சொற்களில் ‘வேலைநிறுத்தம்’ என்கிற வார்த்தையும் ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும், சுய கவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி, அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்.” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.