“ரஜினியை ஃப்ரீயா விடுங்க” – மலேசிய தமிழ் அமைப்புகள் வேண்டுகோள்..!

283

rajini fans

தற்போது மலேசியாவில் ரஜினியின் கபாலி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது அல்லவா..? படப்ப்பிடிப்பு முடிந்ததும் அங்கு தன்னைக்காண வந்திருக்கும் ரசிகர்களுடன் கொஞ்ச நேரம் செலவிட்டு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார் ரஜினி. படப்பிடிப்பு முடிந்து களைப்பாக ஓட்டலுக்கு திரும்பினாலும், அங்கும் திரண்டுவரும் ரசிகர்களை நோக்கி புன்னகையோடு கைகளை வீசி டாடா காட்டிவிட்டுதான் ஓட்டலுக்குள் போகிறார்.

அது மட்டுமல்ல, அரை மணிக்கொரு முறையோ, ஒரு மணிக்கொரு முறையோ வெளியே வந்து பால்கனி வழியாக கை காட்டிவிட்டும் போகிறாராம். ரஜினி இவ்வளவு சகஜமாக தனது ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாக பரவி வருகின்றன.

இது ரஜினியின் பெருந்தன்மை என்றாலும், “ரஜினி நமது நாட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி.. அவரை தயவுசெய்து தொந்தரவு செய்யவேண்டாம். அவரது படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று அவருக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்கவேண்டாம்.. அவரது வேலையை செய்ய அவரை ஃப்ரீயா விடுங்கள்” என ரஜினி ரசிகர்களுக்கு மலேசிய தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Comments are closed.