சூப்பர்ஸ்டாரின் படங்கள் தேசிய லெவலையும் தாண்டி இன்டர்நேஷனல் லெவல் பிசினசில் அடியெடுத்து வைத்து ரொம்ப நாளாகிவிட்டது.. அதனாலேயே அவரது படஹ்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் தமிழ்நாட்டை மட்டுமே மையப்படுத்தாமல் பாலிவுட்டையும் தாண்டும் விதமாக பிரமாண்டம் காட்டப்பட்டு வருகின்றன.
அந்தவிதமாகத்தான் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.O’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை மும்பையில் வைத்து வரும் 20ஆம் தேதி வெளியிட இருக்கிறது படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம்.. ஆனால் இதனால் ரஜினி ரசிகர்கள் வருத்தப்படுவார்கள் என்பதை மனதில் கொண்ட லைக்கா, பர்ஸ்ட் லுக் மட்டும் தான் மும்பையில், மற்றபடி ஆடியோ, ட்ரெய்லர் விழாக்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தான் நடைபெறும் என சமாதனம் கூறியுள்ளார்கள்.
Comments are closed.