பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் ஆர்யாவும் சைக்கிளும் என சொல்லும் அளவுக்கு தினமும் பல கிலோ மீட்டர்களுக்கு சைக்கிளிங் செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் ஆர்யா.. அவன் சும்மாவே ஆடுவான், இதுல சலங்கையும் கட்டிவிட்டா கேட்கவே வேணாம் என ஒரு பழமொழி சொல்வார்கள் தானே.. அந்த மாதிரி இப்போது இங்கிலாந்து நாட்டில் புகழ் பெற்ற சைக்கிள் போட்டியான லண்டன் – எடின்பர்க் – லண்டன் 2017 போட்டியில் நேற்று முதல் கலந்து கொண்டுள்ளார் ஆர்யா..
லண்டனில் ஆரம்பமாகும் இந்தப் போட்டி எடின்பர்க் நகர் வரை சென்று மீண்டும் லண்டன் திரும்பும் 1400 கிலோ மீட்டர் தூரப் போட்டியாகும். மொத்தம் 5 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியல் 1500க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஆர்யா இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா உதவி செய்கிறது. போட்டியில் அவர்சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘2.O’ ஜெர்சி அணிந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதற்கு முன் ஹாலிவுட்டில் ‘2.O’ ராட்சத பலூனை பறக்க விட்டார்கள். இப்போது ஆர்யாவுக்கு ஸ்பான்சர் செய்து இங்கிலாந்தில் புரமோஷன் செய்கிறார்கள்
என்னது ரஜினி படத்துக்கு ஆர்யா புரமோஷன் பண்ணுகிறாரா என்று நினைக்காதீர்கள்.. ராமருக்கு அணில் உதவியதுபோல, ரஜினியின் ‘2.O’வுக்கு ஆர்யா உதவுகிறார் என வைத்துக்கொள்ளுங்களேன்.

Comments are closed.