தமிழுக்காக தடம் மாறிய ரயில்..!

214

thodari poster
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படத்திற்கு முதலில் ‘ரயில்’ என்றுதான் தலைப்பு வைத்திருந்தார்கள்.. இப்போது அதை ‘தொடரி’ என மாற்றியுள்ளார்கள். என்னதான் ரயில் என்பது புழக்கத்தில் உள்ள வார்த்தை என்றாலும் கேட்பதற்கு தமிழ்போல தோன்றினாலும் அது ஆங்கில வார்த்தை என்பதால் வரிவிலக்கில் சிக்கலை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக தூய தமிழில் ‘தொடரி’யாக மாற்றியுள்ளார்கள்..

தனுஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப்படம் முழுவதும் ரயில் பயணத்தில் நடக்கும் கதை என்கிறார்கள்.. அதனால் படத்தில் ரயிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது என்றே சொல்லலாம். இதில் தனுஷ் ரயில்வே கேண்டீன் தொழிலாளியாக நடித்துள்ளார். வழக்கம்போல பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளரான டி.இமான் தான் இசையமைத்துள்ளார்.

Comments are closed.