சமீபத்தில் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்டவாரியாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, மதுரை ரசிகர்களிடம், பேசும்போது ‘மதுரைன்னா வீரம், உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போடணும்னு ஆசை. ஒருநாள் அதற்கு ஏற்பாடு செய்வேன்’ என்று பேசிஇருந்தார்.
“தலைவர் சொன்னதை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று முடிவு செய்த மதுரை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள், மதுரை அழகர் கோயில் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள், பொதுமக்களுக்கு ஆட்டுக்கறி விருந்தளித்து முப்பெரும் விழாவை நடத்தி அசத்தினார்கள்.
இந்த விழாவை தொடங்கி வைக்க வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், “ரஜினி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்துள்ளார். ரஜினி தொடங்கியுள்ள ஆன்மிக அரசியலில், நான் அவரின் காவலனாக இருப்பேன். நடிகர்களை மக்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பது தேர்தலுக்குப் பின்பு தெரியும். ரஜினி ஈடுபடத் தொடங்கியதும் அரசியல் சுத்தமாகும். முறைப்படி அவர் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அறிவித்ததும் பல அரசியல் கட்சிகளுக்கு தலைசுற்ற போகிறது” என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்..
அதற்கு முதல் நாள் தான் பொது இடத்தில் கிடாக்களை மொத்தமாக வெட்டுவதை தவிர்க்கவும் என்று, பீட்டா கேட்டுக்கொண்டதாலும், ரஜினியும் பீட்டாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாலும் ரஜினி ரசிகர்களும் அதை மதித்து வெளியிலிருந்து கறி சமைத்து எடுத்துவந்து விருந்து வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Comments are closed.