வேல்ஸ் பல்கலைக்கழகம் Panache Events & Branding நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் “மகளிர் ஆளுமை விருதுகள் 2018” விருது வழங்கும் விழா பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிவாலயா அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் திரௌபதி முர்மு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 12 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பு பேருரை ஆற்றினார்.
ராதிகா சரத்குமாருக்கு கலை மற்றும் பண்பாடு துறையில் சிறப்பான பங்களிப்பை தந்து வருவதற்காக விருது வழங்கப்பட்டது. விருது பெற்றுவர்கள் சார்பாக நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, “மகளிர் ஆளுமை விருதுகளை எங்களுக்கு வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நன்றி. பெண்களாகிய நம்மை யாரும் இயக்க முடியாது, சர்வமும் நமக்கு நாமே. பல்வேறு துறைகளில் இருந்து நாங்கள் விருதுகளை பெற்றிருக்கிறோம். நாம் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக, உறுதியாக இருக்க வேண்டும்” என்றார்.
தமிழில் வணக்கம் என்று சொல்லி தனது பேச்சை ஆரம்பித்த சிறப்பு விருந்தினர் ஜார்க்கண்ட் மாநில ஆளுனர் மேதகு திரௌபதி முர்மு, “இந்த நவீன சமூகத்தில் இந்தியா மேம்பாடு அடைந்து கொண்டே இருக்கிறது. இந்தியா நமது சாதனையார்களை கண்டு பெருமை கொள்கிறது. சின்னபிள்ளை அவர்கள் தமிழ்நாட்டின் பெருமைமிகு பெண்மணி.. பெண்களுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என்றார்.

Comments are closed.