“நான் நல்லவன் இல்லை.. ரொம்ப நல்லவன்” ; ராதாரவி கலாட்டா..!

208

area 78

நடிகர்சங்க பொறுப்புகளில் இருந்து விளகினாரோ என்னவோ, ராதாரவி நடிப்பில் இந்தவருடம் நிறைய படங்கள் வெளியாகி வருகின்றன.. அடுத்தடுத்து படங்களிலும் இடைவிடாமல் நடித்து வருகிறார்.. குறிப்பாக இளைய இயக்குனர்களின் வான்ட்டேட் ஆர்டிஸ்ட்டாக ராதாரவி இருக்கிறார் என்பதுதான் உண்மை. இறுதிச்சுற்று, ஜில் ஜங் ஜக், மனிதன், மருது என பல படங்களில் ராதாரவியின் நடிப்பிற்கு கைதட்டல் அள்ளியது.

சமீபத்தில் மனிதன் படத்தில் நீதிபதியாக நடித்து பார்வையாளர்கள் அனைவரையும் தன்னுடைய காட்சிகளில் எல்லாம் தன்வசம் திருப்பினார். ‘மருது’விலும் பண்பட்ட நடிப்பை வழங்கியிருந்தார் ராதாரவி. இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறைவி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் ராதாரவி.. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றபோது, அதில் ராதாரவியும் கலந்துகொண்டார்.

“இத்தனை வருடங்களில் நிறைய படங்களில் வில்லனாகவே நடித்துவிட்டேன். இப்போதுதான் என்னை நல்லவனாக காட்டி வருகிறார்கள். அதிலம் இறைவி படத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்னை ரொம்ப நல்லவனாக காட்டியிருக்கிறார்” என கூறியுள்ளார் ராதாரவி. இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் ஜுன்-3ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.

Comments are closed.