தற்போது ராதாமோகன் டைரக்சனில் ‘பிருந்தாவனம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் அருள்நிதி.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.. இந்தநிலையில் மீஎண்டும் தனது அடுத்த படத்திலும் ராதாமோகன் டைரக்சனில் நடிக்க இருக்கிறார் அருள்நிதி..
ரொமாண்டிக் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்தப்படம் வரும் ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது. இது பற்றி அருள்நிதி கூறும்போது, “நாங்கள் இருவரும் ஒருவரின் எல்லையை, வசதியை புரிந்துகொண்டு வேலை பார்த்தோம்.. அதனால் பிருந்தாவனம் படம் ஒரு இனிய அனுபவமாக அமைந்தது.. அதனால் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து வேலை பார்க்கும் நாட்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

Comments are closed.