தெலுங்கு முன்னணி ஹீரோவாக விளங்கும் விக்டரி வெங்கடேஷின் தந்தையும் பழம்பெரும் தயாரிப்பாளருமான டி.ராமாநாயுடு இன்று காலமானார். சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ ரஜினிகாந்த் நடித்த ‘தனிக்காட்டு ராஜா’, உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களை தயாரித்தவர் தான் டி.ராமா நாயுடு.
1963ல் ஒரு தயாரிப்பாளராக அடியெடுத்துவைத்த இவர் ஒருசில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார். 130 திரைப்படங்களை தயாரித்த ஒரே தயாரிப்பாளர் என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இவரது பேரன் ராணா டகுபதி, இப்போது தெலுங்கு மற்றும் தமிழில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
Comments are closed.