
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டு சேராமல் தனி கட்சியாய் போட்டியிட்டு 37 தொகுதிகளை கைப்பற்றி மக்கள் எப்போதும் தன் பக்கம் தான் என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை உருவெடுக்க வைத்திருக்கும் இந்த வெற்றிக்கு சொந்தக்காரரான தமிழக முதல்வருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
அதில் “ஏற்கனவே தங்களின் நல்லாட்சியில் திரையுலகம் நன்றாக இயங்கி வருகிறது. கூடிய விரைவில் வரப்போகும் அம்மா திரையரங்கங்கள் மூலம் இனி சிறு தயாரிப்பாளர்களும் லாபம் பெறுவார்கள். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பதற்கேற்ப தங்களது உழைப்பால் இந்த மாபெரும் வெற்றியை சாத்தியமாக்கிய தங்களுக்கு எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது
Comments are closed.