
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ செயலாளரான டி.சிவா காவல்துறையின் திருட்டுவீடியோ தடுப்பு பிரிவிலும் உளவுத்துறை பிரிவு கண்காணிப்பாளரிடமும் தங்களது சங்கத்தில் பணியாற்றிய மோசடி நபர் பற்றிய புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், “தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக கேபிள் டிவிக்கான உரிமம் உள்ள புதிய திரைப்படங்களின் பாடல்கள், படக்காட்சிகள் ஆகியவற்றை வினியோகம் செய்ய பணியாளராக நியமிக்கப்பட்ட சதீஸ்குமார் என்பவர், ஏற்கனவே எங்களது சங்கத்தின் லெட்டர்பேடை தவறாக உபயோகித்ததற்காக காவல்துறையால் வழக்கு பதியப்பட்டு தலைமறைவாக இருப்பவர் என்பது தெரியாமல் அவரை பணியில் அமர்த்தியிருந்தோம்.
தற்போது அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டோம். ஆகையால் மேற்படி சதீஸ்குமார் என்பவர் எங்களது சங்கத்தின் மீது புகார் எதுவும் தொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாமென தங்களை கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது
Comments are closed.