மூன்றுமுறை கடத்தப்பட்டார் ப்ரியா ஆனந்த்..!

135

‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ படங்களுக்கு பிறகு சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் ப்ரியா ஆனந்த் பிஸியான நடிகையாகிவிட்டார். அதர்வாவுடன் ‘இரும்பு குதிரை’, விக்ரம் பிரபுவுடன் ‘அரிமா நம்பி’, கௌதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய்’ என வளர்ந்துவரும் இளம் ஹீரோக்களுக்கு இப்போது ஜோடி இவர் தான். தற்போது ‘ஜெயம்கொண்டான்’ கண்ணன் இயக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திலும் விமலுக்கு ஜோடியாக இவர்தான் கதாநாயகியாக நடிக்கிறார்..

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ‘அரிமா நம்பி’யில் இவர் கடத்தப்படுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறதாம். படத்தின் முக்கிய காட்சியான இந்தக்கடத்தலை மையமாக வைத்து அடுத்தடுத்த காட்சிகள் நகர்கின்றனவாம்.

இதேபோல ‘வை ராஜா வை’ மற்றும் ‘இரும்பு குதிரை’ படத்திலும் கூட ப்ரியா ஆனந்த் கடத்தப்படுவதாக காட்சிகள் இருந்தாலும் அவை அவ்வளவு சீரியஸான காட்சிகளாக இல்லாமல் காமெடியை மையப்படுத்தி அமைந்துள்ளதாம்.

Comments are closed.