ஸ்டண்ட் மாஸ்டராக மாறினார் பிருத்விராஜ்..!

265

 

வரப்போகிற ஓணம் பண்டிகைக்கு, தான் நடித்துள்ள ‘சப்தமஸ்ரீ தஸ்கரா’ படத்தின் மூலமாக வாணவேடிக்கை நிகழ்த்த இருக்கிறார் பிருத்விராஜ். இவருக்கு ஜோடியாக ரீனு மேத்யூஸ் நடிக்கிறார்.. இந்தப்படத்தில் இன்னொரு இளம் முன்னணி நடிகரான ஆசிப் அலியும் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்குத்தான் இந்தப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக மாறி சண்டைப்பயிற்சி அளித்திருக்கிறாராம் பிருத்விராஜ். ஏற்கனவே ‘ஹீரோ’ என்கிற படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக நடித்திருந்த பிருத்விராஜ், இப்போது ஒரிஜினலாகவே ஸ்டண்ட் மாஸ்டராகவே மாறி பயிற்சி கொடுக்கும் அளவுக்கு போய்விட்டார்.. சபாஷ்..

Comments are closed.