‘பிரசாத் ப்ரிவியூ தியேட்டர்’ ; திரையுலகினருக்கு ஒரு வரப்பிரசாதம்..!

211

prasad

சென்னை நகரின் மையப்பகுதியான சாலிகிராமத்தில் அமைந்துள்ளது திரையுலகில் பழம்பெருமை மிக்க ‘பிரசாத் லேப்.. சினிமா உலகின் சகல போஸ்ட் புரொடக்சன் பணிகளையும் ஒரே இடத்தில் செய்துகொள்ளும் வசதியை கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தில் இயங்கி வருவதுதான் ‘பிரசாத் ப்ரிவியூ தியேட்டர்’..

சில வருடங்களாகவே திரையுலகினருக்காக திரைப்படங்கள் திரையிடுதல், இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றை நடத்துவதற்கு ஒரு அருமையான இடமாக திகழ்ந்து வருகிறது பிரசாத் ப்ரிவியூ தியேட்டர்..

ஆரம்பத்தில் 128 இருக்கைகள் மட்டுமே இந்த ப்ரிவியூ தியேட்டரில் இருந்தது.. அதன்பின் இதன் நிர்வாகியாக திரு.கல்யாணம் அவர்கள் பொறுப்பேற்றபின் இதனை நவீனப்படுத்தி இருக்கைகளை அதிகரிக்கும் ஆலோசனையை நிர்வாகத்தினரிடம் கூறி, அதன்படி தியேட்டர் சில மாதங்களுக்கு முன் நவீனமயமாக்கப்பட்டது.

இந்த தியேட்டரில் ஏற்கனவே இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு வணிக ரீதியாக நடத்தப்பட்டு வரும் தியேட்டர்களில் உள்ள நவீனமான 190 குஷன் இருக்கைகள் பொருத்தப்பட்டு முன்னைக்காட்டிலும் அதிகம் பேர் படம் பார்க்கும் வண்ணம் தியேட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் இருக்கைகள் போடும் வசதியும் உள்ளது. கூடுதல் இருக்கைகளுடன் மொத்தம் 230 பேர் லேப் தியேட்டரில் அமர முடியும்.

திரைப்படங்களை பளிச்சென்றும், துல்லியமாகவும் பார்வையாளர்கள் பார்த்து பரவச நிலை அடையும் வண்ணம் பழையஸ் கீரின் அகற்றப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்புடைய சில்வர் ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது.

ஒலி ஒளி அமைப்பு துல்லியமாக இருக்கும் வகையில் 45லட்ச ரூபாய் செலவில் 4 K தொழில் நுட்பம் மேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தப்பட்டுள்ள முதல் ப்ரிவியூ தியேட்டர் ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் மட்டுமே.

அதுமட்டுமல்ல, கூடுதலாக பார்வையாளர்கள் வரும்பட்சத்தில், அருகிலேயே உள்ள 70 எம்எம் அரங்கிலும் அமர வைக்க தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரையரங்கம் ஆசியாவிலேயே முதல் பெரிய 70 எம்எம் திரை கொண்ட நவீன அரங்காகும். இங்கு 80 பேர் வரை அமர்ந்து படம் பார்க்கலாம்.

விஐபிகள் – செய்தியாளர்கள் சந்தித்துப் பேச நவீன குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெரிய அறையும் லேப் தியேட்டரிலேயே உள்ளது.

இந்த அரங்குகளில் கழிப்பறைகள் நவீனமயமாக்கம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, 250இருக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி கொண்ட ஒரே ப்ரிவியூ தியேட்டர் சென்னையில் ‘ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர்’ மட்டுமே என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவரும் நன்கறிவார்கள்.

‘ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர்’ திரையுலகினருக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.

Comments are closed.