இன்றைக்கு பிரபலமாக இருக்கும் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்கள் நேரடியாக மக்களை சென்றடைய நம்புவது சமூக வலைதளங்களைத்தான். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தங்களது படங்களைப் பற்றிய விபரங்களை ரசிகர்களுடன் இதன் மூலம்தான் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்தவகையில் ஃபேஸ்புக்கைவிட ட்விட்டர் தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அப்படிப்பட்ட ட்விட்டர் நம்ம டோலிவுட் பவர்ஸ்டார் பவன் கல்யாணை மட்டும் விட்டுவிடுமா என்ன?. ஆம்..நேற்று புத்தாண்டு அதுவுமாக வெற்றிகரமாக ட்விட்டரில் தன்னோட கணக்கை துவங்கியிருக்கிறார் பவன் கல்யாண்.. “எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..அமைதியும் நல்ல உடல்நலமும் உண்டாகட்டும்” என்பதுதான் அவரது முதல் ட்வீட்.
Comments are closed.