மாயா, மாநகரம் போன்ற தரமான அதேசமயம் வெற்றி படங்களாகவும் தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாரித்துள்ள படம் தான் ‘மான்ஸ்டர்’. ‘ஒருநாள் கூத்து’ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்கியுள்ளார். ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
மான்ஸ்டர் குழந்தைகளுக்கான திரைப்படம்.. அதுமட்டுமல்ல இதில் எஸ்.ஜே.சூர்யா இதுவரை நடித்திராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீடு மற்றும் பட ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்

Comments are closed.