‘பீச்சாங்கை’ படக்குழுவினருக்கு தனஞ்செயன் கொடுத்த ஆலோசனை..!

230

peechangai

நகரின் மிகப்பெரிய பிக்பாக்கெட் திருடன்.. இடது கையை மட்டுமே உபயோகப்படுத்தி தொழிலை நடத்துகிறான்.. திடீரென விபத்தில் காயம்பட்ட்ட அவனது இடதுகை (பீச்சாங்கை) அதன்பின்னர் அவனுக்கு ஒத்துழைக்க முயன்று தன்னிஷ்டப்படி இயங்கினால்..? நினைக்கவே பேஜாராக இருக்கிறது அல்லவா..? இதைத்தான் ‘பீச்சாங்கை’ படத்தின் மையக்கருவாக எடுத்துள்ளார்கள்..

இந்தப்படத்தில் அறிமுக நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளதோடு ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளார் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட அசோக் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அஞ்சலிராவ் கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், பொன்முடி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.. இந்தப்படக்குழுவினருக்கு ஆரம்பத்திலே ஊக்கமும் உற்சாகமும் தந்துவரும் தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது, “இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது.. இன்றைய தேதியில் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸாகும் சமயத்தில் வெளியாகும் படங்கள் ஓரளவு வரவேற்பையும் வசூலையும் பெறுகின்றன. அதனால் அவசரப்பட்டு நான்கைந்து படங்கள் ரிலீஸாகும் நேரத்தில் இதை ரிலீஸ் செய்துவிடாதீர்கள்.. ரிலீஸில் கொஞ்சம் நிதானம் காட்டுங்கள்” என ஆலோசனை கூறினார்.

Comments are closed.