ஆரா சினிமாஸ் வெளியிடும் பண்டிகை..!

236

pandigai

கிருஷ்ணா, ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள புதிய படம் பண்டிகை.. பெரோஸ் இயக்கியுள்ள இந்தப்படத்தை நடிகை விஜயலட்சுமி தயாரிக்கிறார். இளைஞர்களிடையே பொழுதுபோக்காக துவங்கி, பந்தய போட்டியாக, சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் சண்டை போட்டிகளை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை போட்டிக்கு தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல் தான் பண்டிகை. காதலிலும் ஆக்சனிலும் சரியான அளவில் பயணிக்கும் படம் இது . இருமுக, தேவி உள்ளிட்ட படங்களை வெளியிட்டு வெற்றிகளை குவித்துக்கொண்டிருக்கும் ‘ஆரா சினிமாஸ் பண்டிகை படத்தை வெளியிட இருக்கிறது.

Comments are closed.