
ரெண்டு சூர்யா, ரெண்டு ஜோதிகான்னு ஹீரோ ஹீரோயினை டபுள் ஆக்ஷன்ல நடிக்க வச்சு ‘பேரழகன்’ படத்தை இயக்கினாரே சசிசங்கர், அவரை ஞாபகம் இருக்கிறது தானே..? அதுமட்டுமல்ல, இவர் மலையாளத்தில் கூட வெற்றி பெற்ற 15 படங்களை இயக்கியவர்.
இப்போது தமிழில் தான் இயக்கும் புதிய படத்துக்கும் ‘பகடை பகடை’ என டபுள் ஆக்ஷனிலேயே டைட்டில் வைத்து அசத்தியிருக்கிறார். பணம் எப்படியெல்லாம் ஒருவன் வாழ்க்கையில் விளையாடுகிறது, பகடைக்காய் மாதிரி எப்படியெல்லாம் அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது என்பதைத்தான் இதில் சொல்லியிருக்கிறாராம் சசிசங்கர்
காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து உருவாகும் இந்தப்படத்தில் திலீப்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் வேறு யாருமல்ல.. ‘ஜெயம்’ படத்தில் வில்லனின் குழந்தை பருவ வேடத்தில் நடித்தவர்தான். கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்கிறார். அவரது தங்கை ரிச்சுவும் இந்தப்படத்தில் அறிமுகமாகிறார். ஜான்பீட்டர் மற்றும் ராம்ஜி இருவரும் இணைந்து இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ‘போக்கிரி’ வசனம் புகழ் பிரபாகர் வசனம் எழுதுகிறார்.
Comments are closed.