‘மணி’ படத்தில் ஜானகியின் குரலில் புதிய பாடலை கேட்கலாம்..!

189

பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு 78 வயதானாலும் அவரது குரல் இன்னும் இளமையாகவே உள்ளது. குறிப்பாக அவரது தாலாட்டுப் பாடல்களை கேட்டால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு கூட தூக்கம் வரும். அப்படிப்பட்டவர் தனது 60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக கடந்த வருடம் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்தநிலையில் கடைசியாக அவர் பாடுவதை நிறுத்துவதற்கு முன் ‘மணி’ என்கிற படத்தில் அழகான பாடல் ஒன்றை பாடிக்கொடுத்துள்ளார்.. நிதின் சத்யா, நாசர், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை ஆர்.டி.ராகன் துரைராஜன் என்பவர் இயக்கியுள்ளார்.

இவர் ஒரு இசையமைப்பாளராக சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பாடகி ஜானகி அம்மாள் தனது செல்லப்பிள்ளையாக இவரை கருதுவதால் இந்தப்படத்தில் அவரின் வேண்டுகோளை ஏற்று இந்தப்பாடலை பாடிக்கொடுத்தாராம். .

சமீபத்தில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

Comments are closed.