கிடாயை காப்பாற்றப்போய் உருட்டுக்கட்டையால் அடிவாங்கிய விதார்த்..!

222

oru-kidayin-karunai-manu-movie-audio-launch 1

விதார்த்.. வளர்ந்து வரும் மிக திறமையான நடிகர்.. அவரது படங்கள் அடிக்கடி ஏன் வருவது இல்லையென்றால் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதால் தான்.. அப்படி அவருக்கு நடிப்பில் மகுடம் சூட்டும் விதமாக உருவாகி இருக்கும் படம் தான் ‘ஒரு கிடாயின் கருணை மனு’.. படத்தின் கதாநாயகியாக பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீணா நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கியுள்ளதாலோ அல்லது விதார்த் நடித்துள்ளதாலோ இந்தப்படத்தை சின்ன படம் என நினைத்துவிட வேண்டாம்.. படா படா படங்களை தயாரிக்கும் பாலிவுட் நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளது என்றால் படத்தின் கதை எந்த அளவுக்கு வெயிட்டாக இருக்கும் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.. இந்தப்படத்தில் ஒரு கிடாயை காப்பாற்ற விதார்த் சந்திக்கும் சவால்கள் தான் கதையின் மையக்கரு.

சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டனர் படக்குழுவினர்.. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் கூறும்போது, “இந்தப்படத்தில் வரும் கிராமத்து கலவர காட்சியை யதார்த்தமாக எடுக்கவேண்டும் என நினைத்த இயக்குனர் சங்கையா, டம்மி உருட்டுக்கட்டைகள் வேண்டாம், நிஜமான கட்டைகளை பயன்படுத்தலாம் என கூறிவிட்டார். இது நடிப்பவர்களுக்கு முன் கூட்டியே தெரியாது.. அந்தவகையில் முதல் ஆளாக அடிவாங்கியவர் விதார்த் தான்.. ஆனாலும் வலியை தாங்கிக்கொண்டு நடித்துக்கொடுத்தார்” என கூறினார்.

Comments are closed.