“டைட்டில் மட்டும் தான் என்னுடையது” – செல்வராகவன் விளக்கம்

213

இயக்குனர் செல்வராகவன் சில வருடங்களுக்கு முன் தனுஷை ஹீரோவாக வைத்து ஆரம்பித்து பின்னர் சில காரணங்களால் கைவிட்ட படம் தான் ‘மாலை நேரத்து மயக்கம்’. தற்போது செல்வாவின் மனைவி கீதாஞ்சலியும் இயக்குனராக மாறியுள்ளார். அவர் இயக்கவுள்ள படத்தின் டைட்டிலும் இதுதான்.

அதனால் செல்வா தனது மனைவிக்கு இந்தப்படத்தின் கதையை கொடுத்துவிட்டார் என்றுதான் பலரும் நினைத்தார்கள்.. ஆனால் செல்வராகவனோ “நான் படத்தின் டைட்டிலை மட்டும் தான் கொடுத்திருக்கிறேன். அதைமட்டும் தான் அவர் விரும்பி கேட்டார். மற்றபடி கதையெல்லாம் அவருடையதுதான்” என டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

Comments are closed.