கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ். மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட படத்திற்கு ‘பிளாக்’ என்று தலைப்பிட்டு தயாரிக்கிறது.
ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம், இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம், நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும். அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படி பட்ட கதை தான் ‘பிளாக்’.
நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிகொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும், என்கிறார் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி
இதில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்ய, மெட்ரோ மகேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மதன் கார்கி மற்றும் சந்துரு பாடல்கள் எழுதுகின்றனர். ஷெரிஃப் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.
Comments are closed.