
விடாமல் டெரர் காட்டும் ஆவி, பேய்களிடையே இருந்து விலகி, ஆத்மா என்கிற அமைதியான ஏரியாவுக்குள் புகுந்திருக்கிறார்கள்.
பேருந்து விபத்தில் இறந்துபோன ஐந்து பேர், ஆத்மாக்களாக மாறி அதே விபத்தில் உயிர் பிழைத்த ஸ்ரீகாந்தை தேடிவருகிறார்கள்.. தங்களை ஆத்மாக்கள் என காட்டிக்கொள்ளாமல் ஒவ்வொருவருவராக தங்கள் பிரச்சனையை சொல்ல, முதல் இரண்டுபேரின் பிரச்சனையை தீர்த்துவைக்கும்போதுதான் அவர்கள் மனிதர்கள் அல்ல, ஆத்மாக்கள் என ஸ்ரீகாந்துக்கு தெரியவருகிறது..
இதனால் ஆரம்பத்தில் பயந்த ஸ்ரீகாந்த், பின்னர் மனம் மாறி மீதி மூவரின் பிரச்சனைகளையும் தீர்க்க களத்தில் குதிக்கிறார். ஆனால் இவர் கண்களுக்கு மட்டுமே தெரியும் ஆத்மாக்களுடன் இவர் பேசுவதை பார்த்து, இவரது காதலி நீலம் உபாத்யாயா இவரை மனநலம் பாதிக்கப்பட்டவராக நினைக்கிறார்.. இதனால் காதலில் சிக்கல் விழுகிறது.. இரண்டுதரப்பு பிரச்சனைகளையும் ஸ்ரீகாந்த் எப்படி தீர்த்து சுபம் போடுகிறார் என்பதுதான் மீதிப்படம்.
அஞ்சு பாட்டு, ரெண்டு பைட்டு, கொஞ்சம் காமெடி என பாதுகாப்பான ஏரியாவில் பயணம் செய்திருக்கிறார் ஸ்ரீகாந்த்… ஆனால் படத்தின் வலுவில்லாத திரைக்கதை அவருக்கு அவ்வளவாக உதவவில்லை.. ஸ்ரீகாந்த் குழந்தையாக மாறி ஐஸ்க்ரீம் சாப்பிடும் காட்சிகளுக்கு குழந்தைகள் சிரிக்ககூடும்.
நீலம் உபாத்யாயா என நீளமான பெயரை வைத்திருக்கும் கதாநாயகிக்கு அவ்வளவு நீளமான கேரக்டர் எல்லாம் இல்லை.. காதலிக்கிறார் டூயட் பாடுகிறார்.. ஊடல் கொள்கிறார். உண்மை புரிந்து திருந்துகிறார்.. தட்ஸ் ஆல்.. வவ்வால் பாண்டியாக வரும் மொட்ட ராஜேந்திரன் ஏரியா களைகட்டுகிறது. கோரமுகம், காமெடிமுகம் இரண்டையும் மாறிமாறி காட்டி சபாஷ் பெறுகிறார் இந்த மொட்ட பாஸ். வில்லனாக ஆடுகளம் நரேனும் கனகச்சிதம்.
ஆத்மாக்களாக வரும் ஜூனியர் பாலையா, வினோதினி, மற்றும் மூவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அவர்களும் அதை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஸ்ரீகாந்தின் நண்பனாக வரும் புதுமுக காமெடியனின் காமெடி ரசிக்கும்படி இளைஎன்றாலும் படம் முழுவதும் கலாபவன் மணியின் குரலில் பேசியிருப்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.
முழுவதும் காமெடியாகவும் இல்லாமல் சீரியசாகவும் இல்லாமல் கதையை நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சூர்யா பிரபாகர். ஆத்மாக்கள் தேடிவருவது என்கிற ஒரு புதிய கான்செப்ட்டை எடுத்தவர் பேய்க்கதைகளில் கூட நம்மை லாஜிக் பார்க்கவைத்திருப்பது திரைகதையில் ஏற்பட்ட ஓட்டை.. ஒவ்வொருவரின் பிளாஸ்பேக்கிலும் செயற்கைத்தனத்தை குறைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கும்..
பஸ் விபத்து காட்சி படமாக்கப்பட்ட விதம் உண்மையிலேயே பிரமாதம்.. யார் ரசிப்பார்கள் ஏற்ன்கிற நம்பிக்கையில் இத்தனை பாடல்களை படத்தில் வைக்கிறார்களோ தெரியவில்லை.. பாடல்கள் ஹிட்டாகவிட்டால் படத்தில் பாடல்களுக்கு மரியாதை இல்லை என்பதை இனிவரும் இயக்குனர்களாவது புரிந்துகொள்ளவேண்டும்.
ஓம் சாந்தி ஓம் – வீரியம் குறைந்த ஆத்மா
Comments are closed.