“கேரவன் வேண்டாம் ; லுங்கி போதும்” – அதுதான் சூப்பர்ஸ்டார் ..!

219

 

இன்று மூன்றாம் நிலை நடிகர்கள் கூட படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் ஓய்வெடுக்க, உடைமாற்ற கேரவன் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் “கேரவன் வேண்டாம் ; லுங்கி போதும்” என நம் சூப்பர்ஸ்டார் கூறினால் அதுகுறித்து நாம் ஆச்சர்யம் கொள்ள தேவையில்லை.. காரணம் அவரது எளிமை நாம் அறியாததா..?

‘லிங்கா’ படப்பிடிப்பில், ஒரு வெயில் பின்னி எடுக்கும் மதிய நேரத்தில், ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கு சூப்பர்ஸ்டார் உடைமாற்ற வேண்டி இருந்தது. ஆனால் கேரவனுக்கு சென்று மாற்றிவந்தால் நேரமாகும் என்பதால், எனக்கு ஒரு லுங்கி கொடுங்கள் என கேட்டு வாங்கிய ரஜினி, அதை வைத்து மறைத்தபடி அந்த இடத்திலேயே வேறு உடைக்கு மாறினார்.

அதற்கு காரணமாக அவர் சொன்னது என்ன தெரியுமா? “நான் கேரவனுக்குள்  உடை மாறிவரும் நேரத்திற்குள் இங்கே படப்பிடிப்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெயிலில் வாடியபடி நிற்கவேண்டியிருக்கும். அதனை தவிர்ப்பதற்காகத்தான் கேரவன் வேண்டாம் என்கிறேன்” என்று சொன்னாராம். அதுதான் சூப்பர்ஸ்டார்…!

Comments are closed.