
இன்னும் பல வருடங்கள் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கனவுக்கன்னியாக கோலோச்சப் போகிறார் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாஸிலை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்து ரசிகர்களின் இதயங்களை உடைத்து நொறுக்கினார் நஸ்ரியா.
அதன்பின் ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களைத்தவிர வேறு எந்த படங்களிலும் நஸ்ரியா புதிதாக நடிக்க ஒப்பந்தமாகவில்லை. வரும் ஆகஸ்ட்-21ஆம் திருவனந்தபுரத்தில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து ஆகஸ்ட்-24ஆம் தேதி ஆழப்புழாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் நஸ்ரியா – ஃபஹத் இருவரின் வீட்டிலும் பத்திரிக்கை கொடுக்கும் பணிகளை இப்போதிருந்தே ஆரம்பித்து விட்டார்கள்.
நஸ்ரியாவின் குடும்பத்திற்கு உள்ள சினிமா வட்டார நட்பை விட ஃபஹத்தின் தந்தை பாசிலுக்கு இருக்கும் தொடர்புகள் அதிகம் என்பதால் இப்போதிருந்தே பத்திரிக்கை கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என்கிறது பாசில் வட்டாரம்.
Comments are closed.