வித்யாபாலனா..? நயன்தாராவா..? என பந்தயம் கட்டாத ஒரு பட்டிமன்றமே நடந்துகொண்டிருக்கிறது தமிழ்சினிமா வட்டாரத்தில். வேறு எதற்கு..? யார் நடிப்பு சிறந்தது என்று தான். காரணம் ‘நீ எங்கே என் அன்பே.?’ படம் தான். இந்தியில் வித்யாபாலன் நடித்து சூப்பர்ஹிட்டான ‘கஹானி’ படத்தின் ரீமேக் தான், இப்போது நயன்தாரா நடிக்க தெலுங்கில் ‘அனாமிகா’ என்றும் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ எனவும் தயாராகி உள்ளது.
காணாமல் போன கணவனைத் தேடி அலையும் கர்ப்பிணிப் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இதன் இந்திப்பதிப்பில் நடித்த வித்யாபாலனுக்கு இந்தப்படம் மிகப்பெரிய பெயரை வாங்கித்தந்துள்ளது.
அதேபோல நயன்தாராவின் திரையுலக பயணத்திலும் ‘ நீ எங்கே என் அன்பே ‘ ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறுகிறார் இந்தப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இந்தப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
Comments are closed.